நத்தம்: புதுச்சேரி அணிக்கு எதிரான சி.கே. நாயுடு டிராபி லீக் போட்டியில் தமிழகத்தின் சச்சின், டேரில் பெராரியோ சதம் விளாசினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 25 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே. நாயுடு டிராபி (4 நாள்) தொடர் நடத்தப்படுகிறது. திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு மோகித் ஹரிஹரன் (11) ஏமாற்றினார். பின் இணைந்த சச்சின், டேரில் பெராரியோ ஜோடி புதுச்சேரி அணி பந்துவீச்சை வெளுத்துவாகியது. அபாரமாக ஆடிய இவர்கள் இருவரும் சதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 238 ரன் சேர்த்த போது டேரில் பெராரியோ (125) அவுட்டானார். சச்சின் (139) 'ரன்-அவுட்' ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால் (57), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். லோகேஷ்வர் (17), சோனு யாதவ் (15) நிலைக்கவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 420 ரன் எடுத்திருந்தது. பூபதி வைஷ்ணா குமார் (37), மானவ் பராக் (8) அவுட்டாகாமல் இருந்தனர். புதுச்சேரி சார்பில் சிதாக் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!