Load Image
Advertisement

ஆஸி., ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 7-6, 7-6 என, கிரீசின் சிட்சிபாசை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7--6 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், 'டை பிரேக்கர்' வரை சென்ற மூன்றாவது செட்டை 7-6 என வென்றார்.



முடிவில் ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 10வது முறையாக (2008, 2011-13, 2015-16, 2019-21, 2023) ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடத்தில் தலா 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளனர்.



ரூ. 17.34 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற ஜோகோவிச், சாம்பியன் கோப்பையுடன் ரூ. 17.34 கோடி பரிசு தொகை வென்றார். பைனல் வரை சென்ற சிட்சிபாஸ், ரூ. 9.47 கோடி பரிசு பெற்றார்.



22வது கிராண்ட்ஸ்லாம்

பைனலில் அசத்திய ஜோகோவிச், தனது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இவர் இதுவரை, ஆஸ்திரேலிய ஓபனில் 10 (2008, 2011-13, 2015-16, 2019-21, 2023), பிரெஞ்ச் ஓபனில் 2 (2016, 2021), விம்பிள்டனில் 7 (2011, 2014-15, 2018-19, 2021-22), யு.எஸ்., ஓபனில் 3 (2011, 2015, 2018) பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் (22 பட்டம்) பகிர்ந்து கொண்டார்.



தேம்பி அழுதார்

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க ஜோகோவிச் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்த இவர், இம்முறை வெற்றி பெற்ற தருணத்தில் தேம்பி அழுதார்.



மீண்டும் 'நம்பர்-1'

ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற ஜோகோவிச், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ('ரேங்கிங்') மீண்டும் 'நம்பர்-1' இடத்தை உறுதி செய்தார்.





செக்குடியரசு ஜோடி அபாரம்

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் செக்குடியரசின் சினியகோவா, பார்போரா கிரெஜ்சிகோவா ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஷுகோ அயோமா, இனா ஷிபஹாரா ஜோடியை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக (2022, 2023) கோப்பை வென்றது. தவிர இது, இந்த ஜோடி கைப்பற்றிய 7வது கிராண்ட்ஸ்லாம் பட்டமானது. இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் (2022, 2023), பிரெஞ்ச் ஓபன் (2018, 2021), விம்பிள்டனில் (2018, 2022) தலா 2, யு.எஸ்., ஓபனில் (2022) ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.





Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement