புளோம்போன்டீன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புளோம்போன்டீனில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (37), கேப்டன் டெம்பா பவுமா (36) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மார்க்ரம் (13) ஏமாற்றினார். ஹெய்ன்ரிச் கிளாசன் (30) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய வான் டெர் துசென் (111) சதம் கடந்தார். டேவிட் மில்லர் (53) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், டேவிட் மலான் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த போது மலான் (59) அவுட்டானார். பென் டக்கெட் (3), ஹாரி புரூக் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஜேசன் ராய் (113) சதம் விளாசினார்.
கேப்டன் பட்லர் (36) ஆறுதல் தந்தார். மொயீன் அலி (11), சாம் கர்ரான் (17), டேவிட் வில்லி (8), அடில் ரஷித் (14) நிலைக்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் (0), ஸ்டோன் (1) ஏமாற்ற, இங்கிலாந்து அணி 44.2 ஓவரில் 271 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் நார்ட்ஜே 4, சிசன்டா மாகலா 3 விக்கெட் சாய்த்தனர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!