Load Image
Advertisement

மீண்டு வருமா இந்தியா: நியூசி., யுடன் இரண்டாவது மோதல்

லக்னோ: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது 'டி-20' போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் தோற்ற இந்தியா 0-1 என தொடரில் பின்தங்கியது. இரண்டாவது போட்டி இன்று உ.பி., தலைநகர் லக்னோவில் நடக்கிறது.

முதல் போட்டியில் இளம் வீரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷான், திரிபாதி என 'டாப்-3' வீரர்கள் இணைந்து 15 ரன் தான் எடுத்தனர். இதில் இஷான் கிஷான் நிலை பரிதாபமாக உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய பின், கடைசியாக களமிறங்கிய 7 இன்னிங்சில் 37, 2, 1, 5, 8, 17, 4 என விரைவில் அவுட்டானார். தீபக் ஹூடாவின் ரன் சராசரி கடந்த 13 இன்னிங்சில், 17.88 ஆக குறைந்து விட்டது. இவர்கள் எழுச்சி பெற வேண்டும். பின் வரிசையில் வந்த வாஷிங்டன் சுந்தர் 28 பந்தில் 50 ரன் விளாசியது நம்பிக்கை தருகிறது. 'நம்பர்-1' வீரர் சூர்யகுமார், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் 'பார்மில்' உள்ளனர்.

வருவாரா முகேஷ்

பந்துவீச்சில் இந்திய 'வேகங்கள்' ஏமாற்றம் தொடர்கிறது. அதிவேக பவுலர் உம்ரான் மாலிக் ஒரு ஓவரில் 16 விட்டுத் தந்தார் என்றால் மறுபக்கம் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன் கொடுத்தார். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு அளிக்கலாம். சுழலில் குல்தீப் ஆறுதல் தருகிறார்.

சான்ட்னர் பலம்

நியூசிலாந்து அணி சான்ட்னர் தலைமையில் அசத்துகிறது. பேட்டிங்கில் கான்வே, மிட்செலை அதிகம் சார்ந்துள்ளது. பிரேஸ்வெல், ஆலென், பிலிப்ஸ் கூட்டணியும் தொல்லை தர முயற்சிக்கும். சுழலில் சான்ட்னர் மிரட்டுகிறார். இவருக்கு இஷ் சோதியும் கைகொடுக்கிறார். பிரேஸ்வெல், டிக்னெர், ஜேக்கப் டபி என மூவரும் 'வேகத்தில்' அசத்தலாம்.

12

இரு அணிகளும் 23 'டி-20' போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 12, நியூசிலாந்து 10ல் வென்றன. 1 போட்டி 'டை' ஆனது.

மழை வருமா

லக்னோவில் இன்று மழை வர 2 முதல் 3 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. போட்டிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement