புனே: புனே டென்னிசில் இந்தியாவின் அன்கிதா, பிரார்த்தனா ஜோடி கோப்பை வென்றது.
இந்தியாவின் புனே நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி, கஜகஸ்தானின் அய்னிடினோவா, குளம்பயேவா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை கஜகஸ்தான் ஜோடி 6-4 என கைப்பற்றியது.
இரண்டாவது செட் இழுபறியாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஸ்கோர் 5-5 என ஆனது. பின் அடுத்தடுத்த கேம்களை வென்ற இந்திய ஜோடி 7-5 என செட்டை வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டைபிரேக்கரில்' இந்திய ஜோடி 10-8 அசத்தியது. முடிவில் இந்திய ஜோடி 4-6, 7-5, 10-8 என வென்று சாம்பியன் கோப்பை கைப்பற்றியது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!