விஜ்க் ஆன் ஜீ: மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சக வீரர் குகேஷிடம் வீழ்ந்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
நெதர்லாந்தில் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், குகேஷ் உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.
போட்டிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் நடக்கிறது. இதன் 10 வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிங்கிய குகேஷ், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். இதிலிருந்து கடைசி வரை பிரக்ஞானந்தா மீள முடியவில்லை.
போட்டியின் 40 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இதுவரை முடிந்த 10 சுற்றில் 2 வெற்றி, 6 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, 2ல் தோற்றார். 5.0 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். குகேஷ் (4.0) 10 வது இடத்தில் உள்ளார். முதல் இரு இடத்தில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (7.0), நெதர்லாந்தின் அனிஷ் கிரி (6.5) உள்ளனர்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!