புதுடில்லி: குரோஷிய மல்யுத்த தொடரில் பங்கேற்க வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடந்தது. இவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர். பிரிஜ் பூஷன் விலகும் வரை போட்டியில் பங்கேற்க மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தது.
இதில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், மேரி கோம் தலைமையிலான 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைத்தது. விசாரணை முடியும் வரை, தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் விலகி உள்ளார்.
இதற்கிடையே, குரோஷியாவில் வரும் பிப்.,15ல் ஜாக்ரெப் ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் துவங்குகிறது. இதில் பங்கேற்க இந்திய நட்சத்திரங்களுக்கு மேற்பார்வை குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கான 55 பேர் கொண்ட இந்திய அணியின் வினேஷ், பஜ்ரங் புனியா, ரவிக்குமார், அனுஷ் மாலிக், தீபக் புனியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!