Load Image
Advertisement

பாட்மின்டன்: பிரியான்சு முன்னேற்றம்

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் பாட்மின்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் பிரியான்சு முன்னேறினார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, தகுதிப்போட்டியின் முதல் சுற்றில் பிரியான்சு ராஜாவத், பிரான்சின் கிறிஸ்டோவை சந்தித்தார். துடிப்பாக செயல்பட்ட பிரியான்சு 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் இவர் டென்மார்க்கின் விக்டரை எதிர் கொண்டார். அசத்திய பிரியான்சு 21-10, 13-21, 21-13 என வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு தகுதிப்போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் லியானர்டோவை சந்தித்தார். இதில் சாய் பிரனீத் 21-18, 9-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த சுற்றில் மலேசியாவின் செம் ஜுனிடம் 18-21, 19-21 என வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிப்போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகண்-சிக்கி ரெட்டி ஜோடி 21-15, 21-18 என சீன தைபேயின் லி வெய்- சாங் சிங் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றுக்குள் நுழைந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்வினி-சுமித் ரெட்டி ஜோடி 20-22, 17-21 என இந்தோனேஷியாவின் ஜாபர்-அலிசா ஜோடியிடம் வீழ்ந்தது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement