கேப்டவுன்: ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், 'டி-20' லீக் போட்டியில் 500 விக்கெட் வீழ்த்தி சாதித்தார்.
ஐ.பி.எல்., பாணியில் தென் ஆப்ரிக்காவில் 'டி-20' லீக் நடக்கிறது. கேப்டவுனில் நடந்த லீக் போட்டியில் பிரிட்டோரியா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய மும்பை கேப்டவுன் அணி 18.1 ஓவரில் 130 ரன்களுக்கு சுருண்டு, 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இப்போட்டியில் மும்பை கேப்டவுன் அணிக்காக பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அசத்தினார். 15வது ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரிய அணியின் போர்டைனை (11) அவுட்டாக்கினார்.
இதன் மூலம், 'டி-20' லீக் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது பவுலரானார் ரஷித். இதுவரை 371வது போட்டியில் 500 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ 614 விக்கெட் (556 போட்டி) கைப்பற்றி உள்ளார். சர்வதேச 'டி-20' அரங்கில் ரஷித் 74 போட்டிகளில் 122 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!