புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன் மோதினர். முதல் செட்டை 14-21 என இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 19-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 14-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், அமெரிக்காவின் பெய்வென் ஜாங் மோதினர். இதில் ஏமாற்றிய ஆகர்ஷி 15-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 17-21, 12-21 என, தாய்லாந்தின் புசானனிடம் தோல்வியடைந்தார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!