புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. நடப்பு சாம்பியன்கள் சிந்து, லக்சயா மீண்டும் சாதிக்க காத்திருக்கின்றனர்.
இந்திய தலைநகர் டில்லியில் 'இந்திய ஓபன் சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்திய வீராங்கனை 'நடப்பு சாம்பியன்' சிந்து ('நம்பர்-7'), இந்திய வீரர்கள் பிரனாய் ('நம்பர்-8'), 'நடப்பு சாம்பியன்' லக்சயா சென் ('நம்பர்-10') ஒற்றையர் பிரிவிலும், இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ('நம்பர்-5') என உலகத் தரவரிசையில் 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்ற அதிக இந்தியர்கள் களமிறங்குவது இது தான் முதன் முறை.
கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிக்குப் பின் ஏற்பட்ட முழங்கால் காயத்தில் இருந்த சிந்து, சமீபத்திய மலேசிய ஓபன் தொடரின் முதல் சுற்றில், ஸ்பெயினின் கரோலின் மரினாவிடம் வீழ்ந்தார். இம்முறை சொந்த மண்ணில் இவர் சாதிக்க முயற்சிக்கலாம். முன்னாள் உலக சாம்பியனான சிந்து, காலிறுதியில் சீனாவின் சென் யுபெயை சந்திக்க நேரிடும்.
இந்திய ஓபன் முன்னாள் சாம்பியன் சிந்து, முதல் சுற்றில் டென்மார்க்கின் மியா பிலிட்ச்பெல்ட்டை எதிர்கொள்கிறார். தவிர இளம் வீராங்கனைகள் மாளவிகா, ஆகர்ஷிக்கு முதல் சுற்றில் கடின சோதனை காத்திருக்கிறது.
ஆண்கள் ஒற்றையரை பொறுத்தவரையில் 2022ல் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் பிரனாய், இளம் வீரர் லக்சயா சென், சமீபத்திய மலேசிய ஓபன் முதல் சுற்றில் மோதினர். இம்முறை இருவரும் மீண்டும் முதல் சுற்றில் மோதவுள்ளனர். மறுபடியும் பிரனாய் வெல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ('நம்பர்-5'), 31வது இடத்திலுள்ள டென்மார்க்கின் ஜெப்பே, லாசே ஜோடியை முதல் சுற்றில் சந்திக்கிறது. தவிர பெண்கள் இரட்டையரில் திரிஷா-காயத்ரி, அஷ்வினி-ஷிகா ஜோடியும் பங்கேற்கிறது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!