கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் ஜப்பானின் அகானே யமகுச்சி, டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் அகானே யமகுச்சி, தென் கொரியாவின் ஆன் சே யங் மோதினர். முதல் செட்டை 12-21 என இழந்த அகானே, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 21-11 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அகானே யமகுச்சி 12-21, 21-19, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சன், ஜப்பானின் கோடாய் நரோகா மோதினர். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஆக்சல்சன் 21-6, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!