கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் பிரனாய் முன்னேறினார்.
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் சிகோ அவுரா டிவி வார்டோயோ மோதினர். முதல் செட்டை 21-9 எனக் கைப்பற்றிய பிரனாய், இரண்டாவது செட்டை 15-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். ஒரு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பிரனாய் 21-9, 15-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 22-20 என இந்தோனேஷியாவின் முகமது ஷோஹிபுல் பிக்ரி, பாகாஸ் மவுலானா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 13-21, 21-15, 17-21 என பல்கேரியாவின் கேப்ரியலா ஸ்டோவா, ஸ்டெபானி ஸ்டோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!