கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, ஸ்பெயினின் மரின் கரோலினா மோதினர். முதல் செட்டை 12-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-10 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய சிந்து 15-21 எனக் கோட்டைவிட்டார்.
மொத்தம் 59 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 12-21, 21-10, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா, தென் கொரியாவின் ஆன் செ யங் மோதினர். இதில் ஏமாற்றிய மாளவிகா 9-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.
பிரனாய் அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனாய் மோதினர். ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய பிரனாய் 22-24, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் சோல் கியு சோய், வோன் ஹோ கிம் ஜோடியை வீழ்த்தியது.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பாட், ஷிகா கவுதம் ஜோடி 10-21, 12-21 என தாய்லாந்தின் சுபிஸ்சாரா, சுபாஜிராகுல் ஜோடியிடம் வீழ்ந்தது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!