Load Image
Advertisement

பிரேசில் அணி 'திரில்' வெற்றி: 'ரவுண்டு–16' சுற்றுக்கு முன்னேறியது

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது பிரேசில் அணி. நேற்று சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. தோஹாவில் நடந்த 'ஜி' பிரிவு லீக் போட்டியில் பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றன. இதில் வென்றால் 'ரவுண்டு-16' செல்லலாம் என்ற நிலையில் களமிறங்கின.



பிரேசில் அணியில் காயமடைந்த நெய்மருக்குப் பதில், லுாகாஸ் பகுயட்டா சேர்க்கப்பட்டார். போட்டியின் 27 வது நிமிடத்தில் ராபினாவிடம் இருந்து பந்தை பெற்ற வினிசியஸ், கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார். இதை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோம்மர் தடுக்க, வாய்ப்பு நழுவியது. 39 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியினர், பிரேசில் கோல் ஏரியாவுக்கு அருகில் பந்தை கொண்டு சென்றனர். நல்லவேளையாக பாய்ந்து வந்த கோல் கீப்பர் அலிசன், பந்தை கையில் எடுத்துவிட, பிரேசில் அணி கண்டம் தப்பியது. முதல் பாதியில் 6 முறை முயற்சித்த போதும், பிரேசில் தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்பட வில்லை. முடிவில் முதல் பாதி கோல் எதுவுமின்றி 0-0 என முடிந்தது.



'திரில்' வெற்றி: இரண்டாவது பாதியில், 64வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடிக்க, பிரேசில் வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் 'ஆப் சைடு' என கோல் மறுக்கப்பட, ரசிகர்கள் 'ஷாக்' ஆகினர். போட்டியின் 83வது நிமிடத்தில் இரண்டாவது பாதி துவங்கியதும் மாற்று வீரராக வந்த பிரேசிலின் ரோட்ரிகோ, 83வது நிமிடம் பந்தை சக வீரர் கேஸ்மிரோவிடம் தந்தார். இதை அப்படியே வலது காலால் அடித்து கோலாக மாற்றினார் கேஸ்மிரோ.



முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. ஏற்கனவே செர்பியாவை வென்ற பிரேசில் அணி, 6 புள்ளிகளுடன் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement