Load Image
Advertisement

கானா கலக்கல் வெற்றி: தென் கொரியா ஏமாற்றம்

அல் ரேயான்: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கலக்கிய கானா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடம் வரை போராடிய தென் கொரிய அணி ஏமாற்றம் அடைந்தது.

கத்தாரில், உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அல் ரேயானில் உள்ள எஜுகேசன் சிட்டி மைதானத்தில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-28' தென் கொரிய அணி, 61வது இடத்தில் உள்ள கானா அணியை எதிர்கொண்டது.



கானா முன்னிலை: ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு அடித்த கோல், கையில் பட்டு சென்றதாக மறுக்கப்பட்டது. பின், 'வார்' தொழில்நுட்பத்தில் பரிசோதிக்கப்பட்டு கோல் வழங்கப்பட்டது. பின், 34வது நிமிடத்தில் கானா அணிக்கு கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் ஜோர்டான் அய்யூ துாக்கி அடித்த பந்தை முகமது குடுஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதற்கு தென் கொரிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் கானா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.



கொரியா எழுச்சி: இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தென் கொரிய அணிக்கு 58, 61வது நிமிடங்களில் சோ கு-சங், தலையால் முட்டி இரண்டு கோல் அடிக்க போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. ஆனால் இது, நிலைக்கவில்லை. அடுத்த 7வது நிமிடத்தில் (68வது) கானா வீரர் இனாகி வில்லியம்ஸ் 'பாஸ்' செய்த பந்தில் முகமது குடுஸ், இரண்டாவது கோல் அடித்து 3-2 என மீண்டும் முன்னிலை பெற்றுத் தந்தார்.



கடைசி நிமிடம் வரை போராடிய தென் கொரிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கானா அணி 3-2 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement