Load Image
Advertisement

'வேகமா' கேமரூன்....'சோகமா' செர்பியா: 'விறுவிறு' போட்டி 'டிரா'

தோஹா: கேமரூன், செர்பியா மோதிய போட்டி வினாடிக்கு வினாடி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க, போட்டி 3-3 என 'டிரா' ஆனது.

கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அல் ஜனாப் மைதானத்தில் நடந்த 'ஜி' பிரிவு லீக் போட்டியில் செர்பியா(உலக ரேங்கிங்கில் 21வது இடம்), கேமரூன்(43வது இடம்) அணிகள் மோதின. முதல் போட்டியில் செர்பிய அணி, பிரேசிலிடம் வீழ்ந்தது. கேமரூன் அணி, சுவிட்சர்லாந்திடம் தோல்வி அடைந்தது.



இம்முறை முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின. இரு அணி வீரர்களும் பம்பரமாக சுழன்று விளையாட, ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. 29வது நிமிடத்தில் கேமரூன் அணியின் கேஸ்டலட்டோ முதல் கோல் அடித்தார். முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில்(45+1) செர்பிய அணியின் டுசன் டாடிக் அடித்த 'பிரீ-கிக்' வாய்ப்பை பயன்படுத்தி, சக வீரர் பவ்லோவிச் தலையால் முட்டி 'சூப்பர்' கோல் அடித்தார். அடுத்த சில நிமிடத்தில்(45+3) செர்பியாவின் செர்கெஜ் மிலின்கோவிச்-சேவிச் 20 மீ., துாரத்தில் இருந்து அருமையாக கோல் அடிக்க, முதல் பாதியில் செர்பியா 2-1 என முன்னிலை பெற்றது.



'ஹீரோ' அபுபக்கர்: இரண்டாவது பாதியின் துவக்கத்தில் செர்பியா ஆதிக்கம் செலுத்தியது. 53வது நிமிடத்தில் மிட்ரோவிச் கோல் அடிக்க, செர்பியா 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதற்கு பின் கேமரூன் வீரர்கள் வேகம் எடுத்தனர். 63வது நிமிடத்தில் தனிநபராக அசத்திய மாற்று வீரர் அபுபக்கர் கலக்கல் கோல் அடித்தார். இதனை முதலில் 'ஆப்-சைடு' என அறிவித்தனர். பின் 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்யப்பட, கோல் உறுதியானது. ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார் அபுபக்கர். பின் 66வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடிக்க உதவினார். இம்முறை அபுபக்கர் கொடுத்த 'பாசை' பெற்ற சோப்போ-மோட்டிங் அசத்தலாக கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமநிலையானது. செர்பியா போராடிய போதும், கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. நல்ல முன்னிலையில் இருந்தும் வெற்றியை நழுவவிட்டதால், செர்பிய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். போட்டி 3-3 என 'திரில்' டிரா ஆனது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement