Load Image
Advertisement

பெங்கால் அதிர்ச்சி தோல்வி: புரோ கபடியில் ஏமாற்றம்

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் உ.பி., அணி 33-32 என்ற கணக்கில் பெங்கால் அணியை தோற்கடித்தது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 9வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், உ.பி., அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய உ.பி., அணி, முதல் பாதி முடிவில் 19-11 என முன்னிலையில் இருந்தது.



இரண்டாவது பாதியிலும் அசத்திய உ.பி., அணி ஒரு கட்டத்தில் 32-24 என வலுவான முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 'ரெய்டு' சென்ற கேப்டன் மணிந்தர் சிங் 5 புள்ளி பெற்றுத் தர, பெங்கால் அணி 29-32 என உ.பி., அணியை நெருங்கியது. அபாரமாக ஆடிய உ.பி., அணியினர் முன்னிலையை விட்டுத்தரவில்லை. ஆட்டநேர முடிவில் உ.பி., அணி 33-32 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.



உ.பி., அணிக்கு கேப்டன் பர்தீப் நார்வல் (14 புள்ளி) கைகொடுத்தார். பெங்கால் சார்பில் கேப்டன் மணிந்தர் சிங் 10 புள்ளி பெற்றுத் தந்தார். இதுவரை விளையாடிய 18 போட்டியில், 10 வெற்றி, 2 'டை', 6 தோல்வி என 60 புள்ளிகளுடன் உ.பி., அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. எட்டாவது தோல்வியை பெற்ற பெங்கால் அணி (8 வெற்றி, 2 'டை') 49 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement