புதுடில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக பி.டி. உஷா நியமிக்கப்பட உள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் (ஐ.ஓ.ஏ.,) தலைவர், சீனியர் துணை தலைவர், இரண்டு துணை தலைவர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்), பொருளாளர், இரண்டு இணை செயலர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் டிச. 10ல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் தலைவர் பதவிக்கு, இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா 58, மட்டும் விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து இவர், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதன்மூலம் ஐ.ஓ.ஏ.,யின் முதல் பெண் தலைவரானார். கேரளாவை சேர்ந்த இவர், 'கோல்டன் கேர்ள்', 'பயோலி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படுவார். ஆசிய விளையாட்டு (4 தங்கம், 7 வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (14 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) போட்டிகளில் பதக்கங்களை அள்ளிய பி.டி. உஷா, 1984ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பைனல் வரை சென்று 4வது இடம் பிடித்தார். தற்போது இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!