Load Image
dinamalar telegram
Advertisement

ஸ்பெயின் கோல் மழை: கோஸ்டா ரிகா பரிதாபம்

தோஹா: கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணி 7-0 என வெற்றி பெற்றது.

கத்தாரில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து 22வது சீசன் நடக்கிறது. தோஹாவில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில், உலகின் 'நம்பர்-7' ஸ்பெயின் அணி, 31வது இடத்தில் உள்ள கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது.



துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணியினர், பந்தை நீண்டநேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஆல்மோ முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஸ்பெயின் அணிக்கு 21வது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். பின், 31வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் பெரான் டோரஸ் ஒரு கோல் அடிக்க ஸ்பெயின் அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.



தொடர்ந்து போராடிய கோஸ்டா ரிகா வீரர்களின் கோலடிக்கும் முயற்சிகளுக்கு ஸ்பெயின் அணியினர் முட்டுக்கட்டை போட்டனர். முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.



இரண்டாவது பாதியிலும் அசத்திய ஸ்பெயின் அணிக்கு டோரஸ் (54வது நிமிடம்), காவி (74வது), கார்லஸ் சோலர் (90வது) தலா ஒரு கோல் அடித்தனர். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது) ஆல்வரோ மொராடா ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.



ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement