ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34-20 என்ற புள்ளிக்கணக்கில் மும்பையை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மூன்றாவது கட்ட போட்டிகள் ஐதராபாத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், மும்பை அணிகள் மோதின. துவக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, மும்பையை ஆல் அவுட் செய்ய, 11-3 என முந்தியது. தொடர்ந்து முதல் பாதியில் 18-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய தமிழ் தலைவாஸ் அணி, 34-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை பங்கேற்ற 16 போட்டியில் 7 வெற்றி, 6 தோல்வி, 3 'டை' செய்து 48 புள்ளியுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் சாகர், 150வது 'கேட்ச்' புள்ளி பெற்றார். முதல் நான்கு இடங்களில் புனே (59), பெங்களூரு (57), ஜெய்ப்பூர் (53), உ.பி., (50) உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!