புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் 'டாப்-40' பட்டியலில் இடம் பெற்றார் மணிகா பத்ரா.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசை ('ரேங்கிங்') பட்டியலில் இந்தியாவின் மணிகா பத்ரா, 'டாப்-40' பட்டியலில் நுழைந்தார். சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில் வெண்கலள் வென்ற மணிகா, 740 புள்ளிகள் பெற்று 5 இடங்கள் முன்னேறி, 39வது இடம் பிடித்தார். இதற்கு முன் கடந்த மே மாதம் மணிகா, 38வது இடம் பெற்றதே, இவரது சிறந்த 'ரேங்கிங்' ஆக உள்ளது.
மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீஜா, 76வது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் அர்ச்சனா, 79 வது இடத்தில் தொடர்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சத்யன், 39வது இடம் பெற்றார். மற்றொரு வீரர் அஜந்தா சரத் கமல் 44 வது இடத்தில் உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!