ஜெருசலேம்: உலக செஸ் தொடருக்கான முதலிரண்டு சுற்று போட்டிகளை இந்திய அணி 'டிரா' செய்தது.
இஸ்ரேலில், அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, 'பி' பிரிவில் போலந்து, அஜர்பெய்ஜான், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் சுற்றில் இந்தியா, இஸ்ரேல் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2.0-2.0 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்தியா சார்பில் விதித் சந்தோஷ், நிஹல் சரின், சேதுராமன், அபிஜீத் குப்தா, தங்களது ஆட்டத்தை 'டிரா' செய்தனர்.
அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் இந்தியா, போலந்து அணிகள் மோதின. முதலிரண்டு போட்டிகளை இந்தியாவின் விதித் சந்தோஷ், நிஹல் சரின் 'டிரா' செய்தனர். மூன்றாவது போட்டியில் இந்திய வீரர் நாராயணன் வெற்றி பெற்றார். நான்காவது போட்டியில் சேதுராமன் தோல்வியை தழுவ, 2.0 - 2.0 என்ற கணக்கில் மீண்டும் 'டிரா' ஆனது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!