Load Image
Advertisement

புரோ கபடி: டில்லி கலக்கல்

ஐதராபாத்: ஹரியானா அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 42-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 9வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஹரியானா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணி, ஹரியானா வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தது. முதல் பாதி முடிவில் டில்லி அணி 24-13 என முன்னிலையில் இருந்தது.



இரண்டாவது பாதியிலும் அசத்திய டில்லி வீரர்கள், ஹரியானா அணியினரை மீண்டும் 'ஆல்-அவுட்' செய்தனர். தொடர்ந்து போராடிய ஹரியானா அணியினரால் எழுச்சி பெற முடியவில்லை. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 42-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நவீன் குமார் 15, அஷு மாலிக் 10 புள்ளி பெற்றுத் தந்தனர். ஹரியானா அணிக்கு பிரபஞ்சன் (9 புள்ளி), மன்ஜீத் (7) ஆறுதல் தந்தனர்.



இதுவரை விளையாடிய 16 போட்டியில், 8 வெற்றி, 8 தோல்வி என 45 புள்ளிகளுடன் டில்லி அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. ஹரியானா அணி 36 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 'டை', 9 தோல்வி) 10வது இடத்தில் உள்ளது.



மற்றொரு போட்டியில் பெங்களூரு அணி 33-35 என்ற கணக்கில் புனே அணியிடம் தோல்வியடைந்தது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement