சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இருந்து இந்திய வீரர் சமீர் வர்மா விலகினார்.
சிட்னியில், ஆஸ்திரேலிய ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா பங்கேற்க இருந்தார். சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஹைலோ ஓபனில் காயத்தால் விலகினார். இவரது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்தும் விலகினார். இதேபோல பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிம்ரன் சிங், ரித்திகா தாக்கர் விலகினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்வேஷா கவுடா, ஆஸ்திரேலியாவின் பிட்சயா எலிசியா வைரவோங் மோதினர். மொத்தம் 21 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அன்வேஷா 21-9, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் தன்யா ஹேம்நாத் 15-21, 16-21 என மலேசியாவின் ஜின் வெய் கோவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருதபர்னா பாண்டா, ஸ்வேதபர்னா பாண்டா ஜோடி 16-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் சியா ஹசின் லீ, சுன் ஹசன் டெங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!