Load Image
dinamalar telegram
Advertisement

பதவி விலகுகிறாரா கங்குலி * பி.சி.சி.ஐ.,க்கு புதிய தலைவர்

புதுடில்லி: பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி பதவி விலக முடிவு செய்துள்ளார். புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்படலாம்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக, கடந்த 2019, அக்., முதல், இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி 50, செயலராக ஜெய் ஷா 33, உள்ளனர். இம்மாதத்துடன் இவர்களது பதவிக் காலம் முடிகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, கங்குலி, ஜெய் ஷா மீண்டும் மூன்று ஆண்டுகள் தங்களது பதவியில் தொடரலாம்.

இதனிடையே பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டில்லியில் நடக்கவுள்ளது. இதில் மாநில சங்கங்கள், தேர்தல் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவுள்ளன.

இதனிடையே விரைவில் கங்குலி பதவி விலக உள்ளதாக தெரிகிறது. இவருக்குப் பதில் 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ரோஜர் பின்னி, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. செயலர் பதவியில் ஜெய் ஷா தொடரலாம்.

அடுத்து என்ன

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மன் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதற்கான தேர்தல் வரும் நவ.,ல் நடக்கவுள்ளது.

புதிய சேர்மனாக வருபவர் 2022, டிச. 1 முதல் 2024, டிச. 30 வரை என இரண்டு ஆண்டு பதவியில் இருப்பார். இதற்கு கங்குலி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement