பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில் டில்லி அணி 41-27 என மும்பையை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் பெங்களூருவில் துவங்கியது. நடப்பு சாம்பியன் டில்லி, ஐதராபாத், தமிழ் தலைவாஸ் உட்பட 12 அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில் டில்லி, 2015ல் கோப்பை வென்ற மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் டில்லி அணி 19-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய டில்லி அணி கடைசியில் 41-27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணியின் கேப்டன் நவீன் குமார், அதிகபட்சம் 12 புள்ளி எடுத்தார். மும்பை சார்பில் ஆஷிஸ் அதிகபட்சம் 7 புள்ளி எடுத்தார்.
இன்று நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத்தை எதிர்கொள்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!