Load Image
dinamalar telegram
Advertisement

புதிய 'ஹீரோ' யார்...யார் * ரவி சாஸ்திரி எதிர்பார்ப்பு

சென்னை: ''பும்ரா, ஜடேஜா இல்லாத நிலையில் இந்திய அணியில் புதிய 'ஹீரோக்கள்' உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் எட்டாவது 'டி-20' உலக கோப்பை தொடர், வரும் அக். 16-நவ. 13ல் நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் நேரடியாக 'சூப்பர்-12' சுற்றில் பங்கேற்க உள்ளன. 'குரூப் 2' ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் (அக். 23) பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்திய அணியின் 'நம்பர்-1' பவுலர் பும்ரா, முதுகுப்பகுதி காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். முன்னணி 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா, முழங்கால் காயத்தால் வெளியேறினார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 60, கூறியது:

இந்திய அணியில் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது. இப்பொது அதிக போட்டிகளில் விளையாடுகின்றனர். இதனால் தான் காயம் ஏற்படுகிறது. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

தற்போதுள்ள அணியில் பும்ரா இல்லை, ஜடோஜாவும் பங்கேற்க மாட்டார். இது, அணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும். ஆனால், புதிய ஹீரோக்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட முகமது ஷமி, ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து அதிக அனுபவம் பெற்றவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த தொடர்களில் ஷமி முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த அனுபவம் கட்டாயம் கைகொடுக்கும்.

மற்றபடி நமது இந்திய அணி வலிமையாக காணப்படுகிறது. உலக கோப்பை தொடரில் நமது பயணத்தை வெற்றிகரமாக துவக்க வேண்டும். அரையிறுதிக்கு செல்ல வேண்டும். பின் உலக கோப்பை வெல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement