Load Image
dinamalar telegram
Advertisement

மல்யுத்த வீராங்கனை மரணம்

மிச்சிகன்: மல்யுத்த வீராங்கனை சாரா லீ, 30 வயதில் மரணம் அடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டபிள்யு.டபிள்யு.இ., மல்யுத்த முன்னாள் வீராங்கனை சாரா லீ. 'டிராக் ஸ்டார்', 'பவர் லிப்டராக' இருந்த சாரா லீ, பின் மல்யுத்த போட்டிக்கு மாறினார். கடந்த 2015ல் 'டப் எனப்' தொடரில் சாம்பியன் கோப்பை வென்றிருந்தார். டபிள்யு.டபிள்யு.எப்., முன்னாள் வீரர் வெஸ்டின் பிளேக்கை மணந்த இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில்,' சைனசிடிஸ் பிரச்னைக்குப் பின் முதன் முறையாக 'ஜிம்' செல்கிறேன்,' என தெரிவித்திருந்தார்.

இப்படி ஆரோக்கியமாக இருந்த சாரா லீ இறந்து விட்டதாக அவரது அம்மா டெர்ரி லீ தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,''சாரா லீ கடவுளுடன் சேர்ந்து விட்டார். இது மிகவும் சோகமான நிகழ்வு, எல்லோரும் அதிர்ச்சியாக உள்ளோம்,'' என்றார். சைனசிடிஸ் பிரச்னையால் மரணம் ஏற்பட்டதா என உறுதியாக தெரியவில்லை.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement