கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை கேரளா அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 3-1 என, ஈஸ்ட் பெங்கால் அணியை வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கேரளா அணிக்கு அட்ரியன் லுானா (72வது நிமிடம்), இவான் கல்யுஷ்னி (82வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் அலெக்ஸ் லிமா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவான், 89வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஈஸ்ட் பெங்கால் வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் கேரளா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!