Load Image
dinamalar telegram
Advertisement

தங்கம் வென்றார் சாஜன் பிரகாஷ்: தேசிய விளையாட்டு நீச்சலில்

ஆமதாபாத்: தேசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் (200 மீ., 'மெட்லே', 400 மீ., 'பிரீஸ்டைல்') கேரளாவின் சாஜன் பிரகாஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

குஜராத்தில், தேசிய விளையாட்டு 36வது சீசன் நடக்கிறது. ராஜ்கோட்டில் நடந்த ஆண்கள் நீச்சல் போட்டிக்கான 200 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 2 நிமிடம், 05.81 வினாடியில் கடந்த கேரளாவின் சாஜன் பிரகாஷ், முதலிடம் பிடித்து புதிய தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே கர்நாடகாவின் சிவா (2 நிமிடம், 07.47 வினாடி), தமிழகத்தின் ரோகித் (2 நிமிடம், 08.66 வினாடி) கைப்பற்றினர்.



ஆண்களுக்கான நீச்சல், 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் அசத்திய சாஜன் பிரகாஷ், தங்கப் பதக்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 5வது தங்கம். இதுவரை 5 தங்கம் (50, 100, 200 மீ., 'பட்டர்பிளை', 200 மீ., 'மெட்லே', 400 மீ., 'பிரீஸ்டைல்'), ஒரு வெண்கலம் (800 மீ., 'பிரீஸ்டைல்') வென்றுள்ளார்.



நடராஜ் 'தங்கம்': ஆண்களுக்களுக்கான நீச்சல் 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 25.65 வினாடியில் கடந்த கர்நாடகாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.



மானா 'ஹாட்ரிக்': பெண்களுக்கான நீச்சல் 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் குஜராத்தின் மானா படேல், இலக்கை 29.77 வினாடியில் கடந்து புதிய தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 3வது தங்கம்.



* பெண்களுக்கான 200 மீ., 'மெட்லே', 400 மீ., 'பிரீஸ்டைல்' நீச்சல் போட்டியில் கர்நாடகாவின் ஹாஷிகா தங்கம் வென்றார். இம்முறை இவர் 6 தங்கம் உட்பட 7 பதக்கம் வென்றுள்ளார்.



தமிழகம் 'வெண்கலம்': கலப்பு அணிகளுக்கான 4*100 மீ., 'பிரீஸ்டைல் ரிலே' நீச்சல் போட்டியில் இலக்கை 3 நிமிடம், 50.74 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்த தமிழக அணி வெண்கலம் கைப்பற்றியது.



காலிறுதியில் ஷிவா தபா

ஆண்களுக்கான குத்துச்சண்டை 'வெல்டர்வெயிட்' பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் அசாமின் ஷிவா தபா, குஜராத்தின் அனிகெட் ஜனார்தன் பாண்டே மோதினர். ஷிவா தபா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



துலிகா அசத்தல்

பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ எடைப்பிரிவு பைனலில் டில்லியின் துலிகா மான், பஞ்சாப்பின் கன்வர் பிரீத் கவுர் மோதினர். துலிகா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.



தமிழகம் '59'

தேசிய விளையாட்டில் 19 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 59 பதக்கங்களை அள்ளிய தமிழகம், பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது. முதல் மூன்று இடங்களில் முறையே சர்வீசஸ் (41 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம்), ஹரியானா (29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம்), மஹாராஷ்டிரா (26 தங்கம், 25 வெள்ளி, 48 வெண்கலம்) உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement