Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய பெண்களுக்கு அதிர்ச்சி: கடைசி ஓவரில் பாகிஸ்தானிடம் தோல்வி

சில்ஹெட்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8வது சீசன் நடக்கிறது. சில்ஹெட்டில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.



'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி (17), சிட்ரா அமீன் (11) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் பிஸ்மா மரூப் (32) ஆறுதல் தந்தார். அலியா ரியாஸ் (7), ஆயிஷா நசீம் (9) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். நிடா தர் அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. நிடா தர் (56), துபா ஹசன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.



ரிச்சா ஆறுதல்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மேகனா (15), ஸ்மிருதி மந்தனா (17) சோபிக்கவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2), பூஜா (5) விரைவில் அவுட்டாகினர். ஹேமலதா (20) ஆறுதல் தந்தார். தீப்தி சர்மா (16), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (12) நிலைக்கவில்லை.



நஷ்ரா சாந்து வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட ரிச்சா கோஷ், சாடியா இக்பால் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இவர், 13 பந்தில் 26 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இந்திய அணி 19.4 ஓவரில் 124 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சாந்து 3, சாடியா, நிடா தர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.



6 ஆண்டுகளுக்கு பின்...

இந்திய பெண்கள் அணி, 6 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச 'டி-20' அரங்கில் முதன்முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. கடைசியாக 2016ல் டில்லியில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. இதுவரை இவ்விரு அணிகள் 13 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10, பாகிஸ்தான் 3ல் வென்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement