Load Image
dinamalar telegram
Advertisement

வங்கதேசத்தை வென்றது பாகிஸ்தான்: முத்தரப்பு 'டி–20' கிரிக்கெட்டில்

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு 'டி-20' லீக் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு 'டி-20' தொடரில் பங்கேற்கின்றன. கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த லீக் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேசம், 'பீல்டிங்' தேர்வு செய்தது.



பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசம் (22), ஷான் மசோத் (31) ஓரளவு கைகொடுத்தனர். ஹைதர் அலி (6), இப்திகார் அகமது (13), ஆசிப் அலி (4) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய முகமது ரிஸ்வான் (78*) அரைசதம் கடந்து அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது.



சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் (10), சபிர் ரஹ்மான் (14) சுமாரான துவக்கம் தந்தனர். லிட்டன் தாஸ் (35), ஆபிப் ஹொசைன் (25) ஆறுதல் தந்தனர். மொசாதக் ஹொசைன் (0), கேப்டன் நுாருல் ஹசன் (8), டஸ்கின் அகமது (2), நசும் அகமது (0) ஏமாற்றினர்.



யாசிர் அலி (42*) ஓரளவு கைகொடுத்த போதும், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் 3, முகமது நவாஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement