Load Image
Advertisement

காம்பிர் அணி சாம்பியன்: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில்

ஜெய்ப்பூர்: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் காம்பிர் தலைமையிலான 'இந்தியா கேபிடல்ஸ்' அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பைனலுக்கு கவுதம் காம்பிர் தலைமையிலான 'இந்தியா கேபிடல்ஸ்', இர்பான் பதான் வழிநடத்திய 'பில்வாரா கிங்ஸ்' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இர்பான் பதான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



'இந்தியா கேபிடல்ஸ்' அணிக்கு கேப்டன் காம்பிர் (8), டுவைன் ஸ்மித் (3), ஹாமில்டன் மசகட்சா (1), தினேஷ் ராம்தின் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ராஸ் டெய்லர் (82), மிட்சல் ஜான்சன் (62) கைகொடுத்தனர். 'இந்தியா கேபிடல்ஸ்' அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது. ஆஷ்லே நர்ஸ் (42), பிரவீன் குப்தா (4) அவுட்டாகாமல் இருந்தனர். 'பில்வாரா கிங்ஸ்' அணி சார்பில் ராகுல் சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார்.



கடின இலக்கை விரட்டிய 'பில்வாரா கிங்ஸ்' அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வாட்சன் (27) ஆறுதல் தந்தார். 'இந்தியா கேபிடல்ஸ்' சார்பில் பவன் சுயால், பிரவின் தாம்பே, பங்கஜ் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ராஸ் டெய்லர் வென்றார். தொடர் நாயகன் விருதை யூசுப் பதான் ('பில்வாரா கிங்ஸ்') கைப்பற்றினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement