Load Image
dinamalar telegram
Advertisement

பிரேசில் அணி 'நம்பர்–1': 'பிபா' கால்பந்து தரவரிசையில்

ஜூரிச்: 'பிபா' கால்பந்து தரவரிசையில் பிரேசில் அணி 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டுள்ளது. இதில் பிரேசில் அணி, 1841.3 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த மாதம் நடந்த பயிற்சி போட்டியில் பிரேசில் அணி, கானா, துனிசியா அணிகளை வீழ்த்த்தியது. இதனையடுத்து கத்தாரில் நடக்கவுள்ள உலக கோப்பையில் (நவ. 20 - டிச. 18) பிரேசில் அணி 'நம்பர்-1' அந்தஸ்துடன் களமிறங்க உள்ளது.

அடுத்த இரு இடங்களில் பெல்ஜியம் (1816.71 புள்ளி), அர்ஜென்டினா (1773.88) அணிகள் தொடர்கின்றன. 'நடப்பு உலக சாம்பியன்' பிரான்ஸ் அணி (1759.78) 4வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து (1728.47), இத்தாலி (1726.14), ஸ்பெயின் (1715.22), நெதர்லாந்து (1694.51), போர்ச்சுகல் (1676.56), டென்மார்க் (1666.57) அணிகள் 'டாப்-10' வரிசையில் தொடர்கின்றன.



கடந்த 2014ல் கோப்பை வென்ற ஜெர்மனி (1650.21) 11வது இடத்திலும், கடந்த முறை (2018) பைனல் வரை சென்ற குரோஷியா (1645.64) 12வது இடத்திலுள் உள்ளன. இரண்டு இடம் முன்னேறிய ரஷ்யா (1496.11), 33வது இடத்தை கைப்பற்றியது.



இப்பட்டியலில் இந்திய அணி (1192.09) 106வது இடத்தில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement