Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * உலக கோப்பை கால்பந்து தொடருக்காக

புவனேஸ்வர்: 'பிபா' உலக கோப்பை (17 வயது) தொடரில் பங்கேற்கும் 21 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 7வது சீசன் வரும் அக். 11-30ல் நடக்க உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒடிசா, கோவா, மஹாராஷ்டிராவில் போட்டிகள் நடக்கும். இந்திய அணி 'ஏ' பிரிவில் கடினமான பிரேசில், அமெரிக்கா, மொரோக்கோ அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

அக். 11ல் நடக்கும் முதல் மோதலில் இந்திய அணி அமெரிக்காவை சந்திக்கும். அடுத்து மொரோக்கோ (அக். 14), பிரேசிலுடன் (அக். 17) மோதவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கோல்கீப்பர்களாக மோனலிஷா தேவி, அஞ்சலி, தற்காப்பு வீராங்கனைகளாக காஜல், பூர்ணிமா, ஷில்கி தேவி, வர்ஷிகா, மத்திய கள வீராங்கனைகளாக பாபினா தேவி, ஷைலஜா உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

அனிதா குமாரி, லிண்டா கோம், ஷெலியா தேவி, கஜோல், லாவண்யா சுதா உட்பட மொத்தம் 21 பேர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பை செயல்பட காத்திருக்கிறார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement