Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய பெண்கள் அணி ஏமாற்றம் * உலக டேபிள் டென்னிசில்

செங்டு: உலக டேபிள் டென்னிஸ் தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.

சீனாவில் அணிகளுக்கான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 'குரூப்-5'ல் இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது. இதில் நேற்று சீன தைபே அணியை எதிர்கொண்டது இந்தியா.

முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 0-3 என (7-11, 9-11, 3-11) சென் யுவிடம் தோல்வியடைந்தார். இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 1-3 என்ற (8-11, 11-5, 6-11, 9-11) கணக்கில் செங் ஐ சிங்கிடம் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் இந்திய வீரங்கனை தியா, 2-3 என்ற செட் கணக்கில் (6-11, 11-9, 11-9, 8-11, 7-11) போராடி தோல்வியடைந்தார்.

முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய ஆண்கள் அணி, 'ரவுண்டு-16' சுற்றில் இன்று இந்திய அணி, வலிமையான சீனாவை சந்திக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement