Load Image
dinamalar telegram
Advertisement

மூன்றாவது சுற்றில் நிகால் சரின்

டொரன்டோ: 'குளோபல்' செஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் நிகால் சரின்.

கனடாவில் 'குளோபல்' செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பரிசுத் தொகை ரூ. 8 கோடி. மொத்தம் 64 வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன. இந்தியா சார்பில் பங்கேற்ற ஐந்து முறை உலக சாம்பியன் ஆன 'சீனியர்' ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, ரவுனக் சாத்வானி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி தோல்வியடைந்தனர்.

இளம் வீரர் நிகால் சரின், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை எதிர் கொண்டார். மொத்தம் 4 போட்டி நடந்தன. முதல் இரு போட்டி 'டிரா' ஆனது.

மூன்றாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய நிகால் சரின், போட்டியின் 60 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நான்காவது போட்டி 'டிரா' ஆனது. முடிவில் நிகால் சரின் 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் சீன வீரர் டிங் லிரெனை சந்திக்கவுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement