Load Image
dinamalar telegram
Advertisement

தங்கம் வென்றார் மணிஷ்: தேசிய விளையாட்டு டென்னிசில்

ஆமதாபாத்: தேசிய விளையாட்டு டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் மணிஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

குஜராத்தில், தேசிய விளையாட்டு 36வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் மணிஷ் சுரேஷ் குமார், மஹாராஷ்டிராவின் அர்ஜுன் காடே மோதினர். முதல் செட்டை 2-6 என இழந்த மணிஷ், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-3 என வென்றார். முடிவில் மணிஷ் சுரேஷ் குமார் 2-6, 6-1, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.



தமிழகம் அபாரம்: ஆண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் பைனலில் தமிழகம், மஹாராஷ்டிரா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 2-0 (3-0, 3-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

* பெண்கள் ஸ்குவாஷ் பைனலில் தமிழகம் அணி, 0-2 (0-3, 0-3) என டில்லியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

* ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபே சிங் மோதினர். அபாரமாக ஆடிய அபே சிங் 3-1 (11-2, 11-6, 9-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். வேலவன் செந்தில்குமார் வெள்ளி வென்றார்.

* பெண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழகத்தின் சுனைனா, மஹாராஷ்டிராவின் ஊர்வசி மோதினர். அசத்தலாக ஆடிய சுனைனா 3-2 (9-11, 7-11, 11-3, 11-8, 11-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.



தமிழகம் 'வெள்ளி': பெண்களுக்கான நீச்சல் போட்டி 4*200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 9 நிமிடம், 13.40 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்த தமிழக அணி வெள்ளி வென்றது. கர்நாடகா அணி (8 நிமிடம், 51.59 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது.



பைனலில் தமிழகம்: பெண்களுக்கான கூடைப்பந்து (5*5) அரையிறுதியில் தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இதில் தமிழக அணி 82-30 (12-11, 30-4, 19-5, 21-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இன்று நடக்கவுள்ள பைனலில் தமிழகம், தெலுங்கானா அணிகள் மோதுகின்றன.

* ஆண்களுக்கான கூடைப்பந்து (5*5) அரையிறுதியில் தமிழகம், சர்வீசஸ் அணிகள் மோதின. இதில் தமிழக அணி 90-47 (18-5, 28-10, 22-21, 22-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.



அரையிறுதியில் தமிழகம்: பெண்கள் கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கோவா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த தமிழக அணி 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.



தமிழகம் '52'

தேசிய விளையாட்டில் 18 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் உட்பட 52 பதக்கங்களை அள்ளிய தமிழகம், பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் சர்வீசஸ் (40 தங்கம், 25 வெள்ளி, 24 வெண்கலம்), ஹரியானா (25 தங்கம், 22 வெள்ளி, 19 வெண்கலம்), மஹாராஷ்டிரா (24 தங்கம், 22 வெள்ளி, 41 வெண்கலம்) உள்ளன.



லவ்லினா வெற்றி

பெண்களுக்கான குத்துச்சண்டை 'மிடில்வெயிட்' பிரிவு முதல் சுற்றில் அசாமின் லவ்லினா, பீகாரின் நிஷி மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் மஹாராஷ்டிராவின் சானிகா 5-0 என, உத்தரகாண்டின் கவிதாவை வீழ்த்தினார்.

* பெண்களுக்கான 'லைட்வெயிட்' பிரிவு முதல் சுற்றில் ஹரியானாவின் ஜாஸ்மின் 1-0 என, தெலுங்கானாவின் மானசாவை தோற்கடித்தார். மஹாராஷ்டிராவின் பூணம் 4-0 என, ராஜஸ்தானின் நேஹாவை வென்றார்.



பைனலில் சாய் பிரனீத்

ஆண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தெலுங்கானாவின் சாய் பிரனீத் 2-0 (21-12, 21-19) என, கர்நாடகாவின் ரகுவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் கர்நாடகாவின் மிதுன் மஞ்சுநாத் 2-0 (21-9, 21-11) என குஜராத்தின் ஆர்யமான் டான்டனை தோற்கடித்தார்.

* பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மஹாராஷ்டிராவின் மாளவிகா 2-1 (21-10, 19-21, 21-13) என உத்தரகாண்டின் அதித்தியை வென்றார். மற்றொரு அரையிறுதியில் சட்டீஸ்கரின் ஆகர்ஷி காஷ்யப் 2-0 (21-9, 21-15) என கர்நாடகாவின் தான்யாவை தோற்கடித்தார்.



சாஜன் பிரகாஷ் கலக்கல்

ஆண்களுக்கான நீச்சல் தனிநபர் 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் இலக்கை ஒரு நிமிடம், 59.56 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த கேரளாவின் சாஜன் பிரகாஷ் தங்கப் பதக்கம் வென்றார். அசாமின் பிக்ராம் (2 நிமிடம், 03.43 வினாடி), மேற்கு வங்கத்தின் சானு தேப்நாத் (2 நிமிடம், 03.96 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement