Load Image
dinamalar telegram
Advertisement

மாலத்தீவை வீழ்த்தியது இந்தியா * ஆசிய கால்பந்தில் அபாரம்

கோபர்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி, 5-0 என மாலத்தீவை வீழ்த்தியது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் முதன் முறையாக 17 வயதுக்குட்பட்ட அணிகள் மோதும் ஏ.எப்.சி., ஆசிய கோப்பை (2023) தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின. 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி மோதும் போட்டிகள் சவுதி அரேபியாவில் நடக்கின்றன.

நேற்று தனது முதல் போட்டியில் மாலத்தீவை சந்தித்தது. போட்டியின் 11 வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் வன்லால்பெகா கய்டே, முதல் கோல் அடித்து அசத்தினார். 24வது நிமிடம் பனாய் தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முந்தியது. இரண்டாவது பாதியில் இந்திய அணியின் அமன் (59 வது), பாபி சிங் (67 வது), மாற்று வீரராக களமிறங்கிய போனிக்ஸ் (71வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று குவைத்தை சந்திக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement