Load Image
dinamalar telegram
Advertisement

இளம் இந்தியா அபாரம் * 17–1 என பார்சிலோனாவை வீழ்த்தியது

புதுடில்லி: பார்சிலோனா கிளப் அணிக்கு எதிராக போட்டியில் இந்திய பெண்கள் அணி 17-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 'பிபா' பெண்கள் உலக கோப்பை (17 வயது) கால்பந்து தொடர், அக். 11 முதல் 30 வரை நடக்கவுள்ளது. நவி மும்பை, புவனேஷ்வர், மர்கோவா என மூன்று இடங்களில் போட்டிகள் நடக்க உள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி, தனது முதல் மோதலில் வலிமையான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்குத் தயாராகும் வகையில் ஸ்பெயின் சென்ற இந்திய அணி, அங்குள்ள பார்சிலோனா கிளப் அணியுடன் விளையாடியது. சாக்கர்லாந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்திய பெண்கள் கோல் மழை போழிந்தனர். முதல் பாதியில் அனிதா அதிகபட்சம் 5 கோல் (5, 11, 12, 16, 27 வது நிமிடம்) அடித்து மிரட்டினார்.

தவிர நீது லிண்டா 4 (7, 12, 34, 38வது), லிண்டா கோம் 2 (8, 15வது), நேகா 2 (20, 22வது) என கோல் அடித்து அசத்த, 14-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் லாவண்யா (55வது நிமிடம்), ரெஜியா (56வது), சுதா (75வது) தங்கள் பங்கிற்கு ஒரு கோல் அடித்தனர். பார்சிலோனா சார்பில் 54வது நிமிடம் சாண்ட்ரா ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.

முடிவில் இந்திய அணி 17-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement