கோபர்: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, மாலத்தீவை சந்திக்கவுள்ளது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் முதன் முறையாக 17 வயதுக்குட்பட்ட அணிகள் மோதும் ஏ.எப்.சி., ஆசிய கோப்பை (2023) தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக். 9 வரை, 10 நாடுகளில் நடக்கவுள்ளன. மொத்தம் 44 அணிகள் மோதவுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் பட்டியலில் முதலிடம் பெறும் அணிகள் நேரடியாக ஆசிய கோப்பை தொடருக்கு முன்னேறும். தவிர 10 பிரிவிலும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகளில், 'டாப்-6' அணிகளுக்கு, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய அணி 'டி' பிரிவில் சவுதி அரேபியா, மியான்மர், மாலத்தீவு, குவைத் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் நாளை மாலத்தீவு அணியை சந்திக்கவுள்ளது. அடுத்து குவைத் (அக். 5), மியான்மர் (அக். 7), சவுதி அரேபிய (அக். 9) அணிகளுடன் மோதவுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!