ஹோ சி மின்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி தோல்வியடைந்தது.
வியட்நாமில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி, இந்தோனேஷியாவின் ரெஹான் குஷர்ஜந்தோ, லிசா ஆயு கசுமாவதி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 16-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 14-21 எனக் கோட்டைவிட்டது.
மொத்தம் 37 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி 16-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறது. இதன்மூலம் இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!