Load Image
dinamalar telegram
Advertisement

ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி அறிவிப்பு

சென்னை: ஐ.எஸ்.எல்., தொடரின் ஒன்பதாவது சீசனில் பங்கேற்கும் 35 பேர் கொண்ட சென்னை அணி விபரம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ஒன்பதாவது சீசன் அக். 7ல் துவங்குகிறது. மூன்று முறை கோப்பை வென்ற கோல்கட்டா மோகன்பகான், இரு முறை சாதித்த சென்னை உட்பட 11 அணிகள் மோதவுள்ளன. கொரோனா காரணமாக கடந்த இரு சீசன் போட்டிகள் குறிப்பிட்ட மூன்று மைதானங்களில் மட்டும் நடந்தன.

போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இம்முறை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கும் போட்டிகளை, ரசிகர்கள் நேரில் காண உள்ளனர். உலகின் முன்னணி தொடர்களைப் போல, வார இறுதி நாளில் போட்டிகள் நடக்கும் வகையில் அட்டவணை உள்ளது. அக். 7 முதல் 2023, பிப். 26 வரை லீக் போட்டிகள் நடக்கவுள்ளன.

கொச்சியில் நடக்கும் முதல் போட்டியில் கடந்த சீசனில் பைனலில் பங்கேற்ற கேரளா, கோல்கட்டா மோகன்பகான் அணியை சந்திக்கவுள்ளது.

சென்னையில் போட்டி

சென்னை அணி இம்முறை தனது சொந்த மண்ணில் 10 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டியில் அக். 10ல் கோல்கட்டாவில் களமிறங்கும் சென்னை அணி, கோல்கட்டா மோகன்பகானை சந்திக்கிறது. அக்., 14ல் சென்னை அணி, சொந்தமண்ணில் பெங்களூரூவை சந்திக்கும்.

இதற்கான 35 பேர் கொண்ட சென்னை அணி வீரர்கள் விபரம் நேற்று வெளியானது. கேப்டனாக அனிருத் தபா தொடர்கிறார். சமீபத்திய துாரந்த் கோப்பை தொடரில் 3 கோல் அடித்த பீட்டர் சிலிஸ்கோவிச் (குரோஷியா), கரிகாரி (கானா), ஜூலியஸ் டக்கர் (ஜெர்மனி), வாபா (ஈரான்) என வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணிக்கு புதுமுகங்களாக களமிறங்குகின்றனர்.

தவிர ஆகாஷ் சங்வான், நின்தோயின்கன்பா மீட்டெய் என இளம் வீரர்கள் பலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர முகமது ரபிக், அலெக்சாண்டர் ரொமாரியோ, சவுரவ் தாஸ் அணியில் இடம் பெற்றனர். பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் வீரர் தாமஸ் பிரடரிக் 47, செயல்பட உள்ளார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement