Load Image
dinamalar telegram
Advertisement

ரிதுபர்னா, முத்துசாமி ஏமாற்றம்: வியட்நாம் பாட்மின்டனில்

ஹோ சி மின்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் தமிழகத்தின் சங்கர் முத்துசாமி தோல்வியடைந்தார்.

வியட்நாமில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, சீனதைபேயின் சியா ஹாவ் லீ மோதினர். மொத்தம் 34 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய தமிழகத்தின் முத்துசாமி 17-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.



மற்றொரு போட்டியில் இந்தியாவின் மீராபா லுவாங் மைஸ்னம் 8-21, 20-22 என சீனதைபேயின் சி யு ஜென்னிடம் தோல்வியடைந்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் ஹர்ஷித் அகர்வால், கிரண் குமார், ரித்விக் சஞ்ஜீவ் சதிஷ் குமார் தோல்வியடைந்தனர்.



பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி 21-15, 18-21, 17-21 என வியட்நாமின் வு தி டிராங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸ் 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் வியட்நாமின் தி புவாங் துய் டிரானிடம் வீழ்ந்தார்.



மற்ற போட்டிகளில் இந்தியாவின் பிரேரனா, இரா சர்மா தோல்வியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement