Load Image
dinamalar telegram
Advertisement

மூன்றாவது சுற்றில் முத்துசாமி: வியட்நாம் ஓபன் பாட்மின்டனில்

ஹோ சி மின்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தமிழகத்தின் சங்கர் முத்துசாமி வெற்றி பெற்றார்.

வியட்நாமில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, இந்தோனேஷியாவின் டாமி சுகியர்டோ மோதினர். ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சங்கர் முத்துசாமி 14-21, 22-20, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் குமார் 16-21, 21-14, 21-19 என, மியான்மரின் போன் பியா நயிங்கை தோற்கடித்தார். மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் மீராபா லுவாங் மைஸ்னம் 21-16, 18-21, 21-14 என மலேசியாவின் ஜிங் ஹாங் கோக்கை வென்றார். இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவ் சதிஷ் குமார் 17-21, 21-18, 21-13 என, சகநாட்டை சேர்ந்த சாய் பிரனீத்தை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்களான மிதுன் மஞ்சுநாத், ரோகித் மாரிசாமி, பிரியான்ஷு ரஜாவத் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.



பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸ், இரா சர்மா, ருத்விகா ஷிவானி, பிரேரனா தோல்வியடைந்து வெளியேறினர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement