Load Image
dinamalar telegram
Advertisement

பாட்மின்டன்: பிரனாய் 'நம்பர்–15'

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் நான்கு ஆண்டுக்குப் பின் 'டாப்-15' பட்டியலில் இடம் பிடித்தார் இந்தியாவின் பிரனாய்.

சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் பாட்மின்டன் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியல் ('ரேங்க்') வெளியானது. இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஒரு இடம் முன்னேறி, 11வது இடம் பெற்றார். கடந்த சில மாதங்களாக பல்வேறு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர் பிரனாய், ஒரு இடம் முன்னேறி 'நம்பர்-15' இடம் பிடித்தார்.

கடந்த 2018ல் 8வது இடத்துக்கு முன்னேறி இருந்தார் பிரனாய். இதன் பின் இவரது சிறந்த இடமாக இது (15வது) உள்ளது. தவிர இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள உலக டூர் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இவருக்கு 'நம்பர்-1' இடம் தரப்பட்டுள்ளது.

மற்ற இந்திய வீரர்கள் சமீர் வர்மா 31வது, மிதுன் மஞ்சுநாத் 49வது இடங்களில் உள்ளனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இஷான் பட்நாகர், தனிஷா ஜோடி முதன் முதலாக 30 வது இடம் பிடித்து சாதனை படைத்தது. ஆண்கள் இரட்டையரில் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி மூன்று இடம் முன்னேறி 23வது இடம் பிடித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement