Load Image
dinamalar telegram
Advertisement

விலகினார் சிந்து

புதுடில்லி: காயம் காரணமாக தேசிய விளையாட்டில் இருந்து பாட்மின்டன் வீராங்கனை சிந்து விலகினார்.

தேசிய விளையாட்டின் 36 வது சீசன் குஜராத்தில், செப். 29-அக். 10 ல் நடக்கவுள்ளது. இதற்கான பாட்மின்டன் போட்டிகள் அக். 2ல் சூரத்தில் துவங்குகின்றன. இதில் பங்கேற்க இருந்தார் இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை சிந்து. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற சிந்து, சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் கைப்பற்றினார். அப்போது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் பின் கடந்த இரு மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

காயம் சரியாகாத நிலையில் தேசிய விளையாட்டில் இருந்து விலகினார். இருப்பினும் செப். 29ல் நடக்கவுள்ள துவக்கவிழாவில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

சிந்து 27, கூறுகையில்,'' உடற்தகுதியுடன் இருந்திருந்தால் எனது தெலுங்கானா மாநிலத்திற்காக கட்டாயம் விளையாடி இருப்பேன். காயம் காரணமாக விலக நேரிட்டது துரதிருஷ்டவசமானது. 2023ல் ஆசிய விளையாட்டு, 2024ல் ஒலிம்பிக் வரவுள்ளதால் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement