புதுடில்லி: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில் இருந்து விலகினார் சிந்து.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து 27. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றார். இதன் காலிறுதியில் இவரது இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் விளையாடி தங்கம் வென்றார்.
இதன் பின் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப், ஜப்பான் ஓபன் தொடரில் இருந்து சிந்து விலகினார். தற்போது டென்மார்க் ஓபன் (அக்., 18-23) தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இந்த ஆண்டு சிந்து போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. இவரது பயிற்சியாளர் பார்க் தே சங், தென் கொரியாவில் இருந்து விரைவில் இந்தியா வரவுள்ளார். காயம் குணமடையும் பட்சத்தில் இவருடன் இணைந்து சிந்து பயிற்சியை துவக்க திட்டமிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!