Load Image
Advertisement

சரிப்பட்டு வருவாரா சூர்யகுமார்: பாகிஸ்தான் வீரர் கணிப்பு

புதுடில்லி: ''ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார், ரோகித் ஜோடி துவக்கம் தர வேண்டும்,'' என, பாகிஸ்தானின் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை ('டி-20') கிரிக்கெட் தொடர் வரும் ஆக. 27ல் துவங்குகிறது. இத்தொடருக்கான 'நடப்பு சாம்பியன்' இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்கம் தர லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. துவக்க வீரர் பணிக்கு சூர்யகுமார்(செல்லமாக சூர்யா) சரிப்பட்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய இவர்(24, 11, 76, 24 ரன்) நம்பிக்கை தந்தார்.



இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் 'சுழல்' வீரர் டேனிஷ் கனேரியா கூறுகையில், ''ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். இதற்கான தகுதி அவரிடம் உள்ளது. மீண்டும் அணிக்கு திரும்பிய ராகுல் பின்வரிசையில் களமிறங்கினால் நல்லது. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த இடத்திலும் களமிறங்கி ரன் சேர்க்கும் தகுதி இவரிடம் உண்டு. எனவே சூர்யா-ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தால் நன்றாக இருக்கும்,'' என்றார்.



பும்ரா சந்தேகம்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து கனேரியா கூறுகையில், ''ஆசிய கோப்பையில் இருந்து முதுகுப்பகுதி காயத்தால் விலகிய பும்ரா, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பையிலும் பங்கேற்பது சந்தேகம். இருப்பினும் இவரது இடத்தை இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன். ஏனெனில், சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 'வேகத்தில்' அசத்திய இவர், தொடர் நாயகன் விருது வென்றிருந்தார். தவிர இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார் போன்ற திறமையான 'வேகங்கள்' இருப்பது பலம்'' என்றார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement